தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் விற்பனை சார் நுட்ப திறன் பயிற்சி மற்றும் கண்காட்சி

                                தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில்
                  விற்பனை சார் நுட்ப திறன் பயிற்சி மற்றும் கண்காட்சி

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் திறன் மேம்பாட்டு குழு மற்றும் நுகர்வோர் குழுவும் இணைந்து முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்களிடையே சுய வேலைவாய்ப்புத் திறனை வளர்ப்பதற்காக விற்பனை சார் நுட்ப திறன் பயிற்சி மற்றும் கண்காட்சி 2025 நடைபெற்றது.

28 அங்காடிகளில் மாணவர்கள் பாரம்பரிய உணவு, கைவினைப் பொருட்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை அமைத்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கனகராஜ் வழிகாட்டுதல் படி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.குரு வாசுகி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

இவ்விழாவினை முனைவர்.கனகராஜ் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜதுரை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாணவர்களும், ஆசிரியர்களும் பங்குபெற்றனர்.