- தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி T. சவேரியார்புரத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு :
சண்முகையா MLA திறந்து வைத்தார்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி T.சவேரியார்புரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்குத் தந்தை குழந்தைராஜன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபி பெர்னான்டோ, ஊர் தலைவர் ஹெலன்ராஜ், செயலாளர் விஜயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், முன்னாள் கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன் அங்கன்வாடி பணியாளர் அபிலா மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.












