நான் முதல்வன் திட்டம்: யு.பி.சி. தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள்: முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டு

நான் முதல்வன் திட்டம்: யு.பி.சி. தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள்: முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டு

தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ( யுபிஎஸ்சி ) நடத்திய 2025 ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே 25ஆம் தேதி நடைபெற்றது.

மொத்தம் 979 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வின் முடிவுகள் நேற்று ( 11 – 06 – 2025 ) வெளியானது.இந்தத் தேர்வில் 14,
161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதன்மை தேர்வு :

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

விண்ணப்பம் :

இதற்காக தேர்வர்கள் விரிவான விண்ணப்பத்தை ஜூன் 16 முதல் 25 ம் தேதிக்குள் தேர்வாணைய வலைதளத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவித்தப்பட்டுள்ளது.

நேர்காணல் & இறுதித்தேர்வு :

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து :

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்.

மேலும் முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றி முகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.

இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும், பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். “தமிழ்க் கொடி உயர உயரப் பறக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.