கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நெல்லை மணோன்மணியம் பல்கலைக்கழகம் தேர்வு தேதி அறிவிப்பு

கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நெல்லை மணோன்மணியம் பல்கலைக்கழகம் தேர்வு தேதி அறிவிப்பு

நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வந்த சூழலில் கடந்த 24 ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு கனமழை காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து அறிவிப்பை வெளியிட்டார் பல்கலைக்கழக தேர்வுத்துறை தேர்வாணையர்.

இந்நிலையில் மழையின் தாக்கம் சிறிது குறைந்து இருப்பதனால் நவம்பர் 24 ம் தேதி நடைபெற இருந்த தேர்வு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் 5 ம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வுத்துறை தேர்வாணையர் அறிவித்துள்ளார்.