புதிய பஸ் பாஸ் வரும் வரை பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

புதிய பஸ் பாஸ் வரும் வரை பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 2 ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ள நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படும் என தகவல் பரவிய நிலையில், இந்த தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாக பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது.
இதனால் பள்ளிகள் ஜூன் 2 ம் தேதி திறப்பது உறுதியாகி உள்ளது.

மாணவர்கள் பொருளாதாரம் காரணமாக இடைநிறுத்தல் இல்லாமல் தங்கள் பள்ளி படிப்பை தொடர்ந்து முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தமிழ்நாடு அரசு அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண அட்டையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் 2 ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதனால் பள்ளி திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பயண அட்டை வழங்க முடியாது. எனவே அரசு பள்ளி மாணவர்கள் பயண அட்டை இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக தங்கள் பள்ளி சீருடை மற்றும் கடந்த வருடம் வழங்கிய பயண அட்டை மேலும் பள்ளியில் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.

மேற்கண்ட விதி அரசு கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.