கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கு சட்ட அறிவைப் பரப்பும் நோக்கில் கல்லூரி சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (29.09.2025) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

உதவிப்பேராசிரியர் கனகம் வரவேற்று பேசினார். கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின்படி நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி தலைமைதாங்கினார்.

சிறப்பு விருந்தினராக வந்த வழக்கறிஞர்கள் பாலமுருகன் , ரவிக்கண்ணன் மற்றும் மரிக்கொழுந்து கூட்டத்தின் அடிப்படை உரிமைகள், மாணவர்களின் கடமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குடும்ப நல்வாழ்வு சட்டம் நுகர்வோர் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விரிவாக வழங்கினார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பி பயனடைந்தனர். இறுதியில் மாரிச்செல்வி நன்றியுரையாற்றினார்.