தூத்துக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க மே 27 நாளை கடைசி

தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வழியாக நாளை 27. 05. 2025 செவ்வாய்க்கிழமை வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 512 இடங்களும், நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 400 இடங்களும், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 464 இடங்களும், ஓட்டப்பிடாரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 280 இடங்களும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அழைக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலமாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டம் மூலம் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் அரசால் வழங்கப்படும் கல்வி உரிமைத் தொகைகள் மற்றும் இலவச பேருந்து வசதிகளும் உள்ளன.திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரியில் கட்டமைப்புகளும் சிறப்பாக உள்ளன.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து அரசு மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள செயற்கை உதவி மையங்கள் ( Admisdion Facilitation Centre – AFC ) மூலம் விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் ஒரு மாணவருக்கு ரூபாய் 48 மற்றும் பதிவு கட்டணம் ரூபாய் 2 மட்டும்.
எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. பதிவு கட்டணம் ரூபாய் 2 மட்டும்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரி கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.












