பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பெற்றோர்களு க்கான விழிப்புணர்வு கூட்டம் : தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ( மேலூர் )யில் நடைபெற்றது !

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பெற்றோர்களு க்கான விழிப்புணர்வு கூட்டம் :
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ( மேலூர் )யில் நடைபெற்றது !

29.8.2026 அன்று தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலூரில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பிற்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் காலை 10 மணி அளவில் தூத்துக்குடி நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் ஆரம்பமானது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி வரவேற்புரை வழங்கி, கடந்த ஆண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளை பாராட்டி அவர்களை முன்மாதிரியாக கொண்டு நீங்களும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு வனிதா மற்றும் பள்ளி கணக்காளர் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் அந்தோணி மைக்கேல் நன்றி உரை வழங்க கூட்டம் நிறைவுற்றது.