- தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு,மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 80 வது சுதந்திர தின விழா :
தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தேசியக் கொடியேற்றினார் !
தூத்துக்குடி தெற்கு புது தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள்.முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் அனைவரையும் வரவேற்று தேசிய கொடி ஏற்றினார்.
தூத்துக்குடி ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சேட்டட் பிரசிடெண்ட் செம்பலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தூத்துக்குடி ராயல் கிளய் டைரக்டர் கஜேந்திரன் மாணவர்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
மேலும் வீர பெருமாள்,பாரதி சங்கர்,மணி பிரான்சிஸ்,சுப்பையா,மூக்காண்டி, சுடலைமணி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
20 மாணவ – மாணவிகளுக்கு பேக் வழங்கப்பட்டது.
ஆசிரியை ஜான்சி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் ஜான்சி,இந்திரா, பவானி பத்மா, உஷா சாந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.












