சங்கரன்கோவில் ஆடித்தபசு: தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

சங்கரன்கோவில் ஆடித்தபசு:
தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை:
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு நாளை (ஜூலை 28, 2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிவிலக்குகள்:

அரசு தேர்வுகள் இருந்தால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் வங்கிகளுக்கு இந்த விடுமுறை கிடையாது, வழக்கம்போல் செயல்படும்.

மாற்று வேலை நாள்:

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 1, 2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.