பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கோரி உதவி மற்றும் இணைபேராசிரியர்கள் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கோரி உதவி மற்றும் இணைபேராசிரியர்கள் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரி உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு ஆணை ( 05 ) யின்படி அரசு கல்லூரிகளுக்கு இணையான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகையை அரசு இதுவரை வழங்காததை கண்டித்து கல்லூரி உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் 14 நாட்களைத் தாண்டி கல்லூரி உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 7 ம் தேதி ஏயூடி மற்றும் மூட்டா சங்கத்தில் உள்ள உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் மண்டல அலுவலகங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை எனவே இன்று பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி இன்று திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே மாலை 4:30 மணிக்கும் , தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மாலை 4:30 மணிக்கும் மூட்டா சங்கத்தின் உதவி மற்றும் இணை பேராசிரியர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

மேலும் இதனை தொடர்ந்து வரும் 16ஆம் தேதி மாலை 3 மணி முதல் தொடர்ந்து அந்தந்த மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரங்களில் உரிமை மீட்பு உள்ளிருப்பு போராட்டத்தை தொடர இருப்பதாக ஏயூடி ( AUT )மாநில தலைவர் காந்தி ராஜ் மற்றும் மூட்டா ( MUTA) தலைவர் பெரியசாமி ராஜா அறிவித்துள்ளனர்.