தொலைதூரக் கல்வி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு :
இக்னோ சென்னை மண்டலம் அறிவிப்பு!
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் ஜெ.எஸ். தாரதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திரா காந்தி தேசியத் திறந் தநிலை பல்கலைகழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வித் திட்டம் வாயிலில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, இளநிலை, முதுநிலைப் படிப்புகளை வழங்குகிறது.
தற்போது தொலைதூரக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தி ஜூலை 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். இந்த வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இக்னோவின் ஆன்லைன் படிப்பில் சேர விரும்புவோர் https://ignouiop.samarth.edu.in என்ற இணைய தளத்தை பயன் படுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் அவர் கூறியுள்ளார்.












