நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம் :

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம் :

கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகளுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் உள்ள 109 இணைப்பு கல்லூரிகளுடன் செயல்பட்டு வரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செய்முறைத் தேர்வு UG &PG ( Practical Exam) இன்று 06.04.2026 திங்கட்கிழமை தொடங்குகிறது :

இது குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் .பால சுப்பிரமணியன் தெரிவித்ததாவது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செய்முறைத் தேர்வுகள் ( இளநிலை மற்றும் முதுநிலை ) இன்று தொடங்கி மாதம் இறுதிவரை (ஏப்ரல் 30) நடைபெற இருக்கிறது.

அதன் பிறகு இரட்டை பருவத் தேர்வுகள் ( Even Semester – 2, 4 & 6 ) மே மாதம் நடைபெறும்.இதனிடையே 55 நாட்கள் பருவத் தேர்வு விடுமுறை விடப்படும்.

மீண்டும் கோடை விடுமுறைக்குப் பின் 2026 – 2027 ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜீன் மாதம் 15 ம் தேதி திங்கட்கிழமை தொடங்கும் என்று தெரிவித்தார்.

இங்கே பதிவிறக்கம் செய்யவும்

 

April 2026 Examinations – Commencement of Internal Mark Entry – Practical – Project-Theory – Reg