பிஎச்டி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு :

பிஎச்டி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு :

முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்டி ( ஆராய்ச்சி) படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வாயிலாக வழங்குகிறது.

மேலும் ஆராய்ச்சி படிப்பை (பிஎச்டி) முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் நடத்துகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு 2 முறை (ஜனவரி மற்றும் ஜூன்) நடைபெறுகிறது.

இந்நிலையில், 2026 ஜூன் பருவ பிஎச்டி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2026 ஜூன் பருவ பிஎச்டி முழு நேர மற்றும் பகுதி நேர மாணவர் சேர்க்கைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம், விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.tnou.ac.in ) விரிவாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.