செய்துங்கநல்லூரில் இலவச கண் சிகிச்சை மற்றும் பெண்களுக்கான சிறப்பு முகாம் : எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடங்கி வைத்தார்

செய்துங்கநல்லூரில் இலவச கண் சிகிச்சை மற்றும் பெண்களுக்கான சிறப்பு முகாம் :
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில்
இலவச கண்சிகிச்சை மற்றும் பெண்களுக்கான சிறப்பு முகாம்
ஜோஸ் மெட்ரிகுலேசன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய செலின் ஜார்ஜ் தலைமை வகித்தார். கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முகாமை துவக்கிவைத்தார்.

முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுவினரால் கண் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டர்கள் செல்வன் துரை, விஜயகுமாரி, விஜய ஏஞ்சல் மையத்தலைவர் சந்தன பேச்சியம்மாள்,
மணியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் கிராம உதயம் மேலஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து செய்திருந்தது.