செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி.நடுநிலைப் பள்ளி 86 வது ஆண்டு விழா :
மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப்பள்ளி 86 வது ஆண்டு விழா நடந்தது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமை வகித்தார். பாளை கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனீஸ் பீட்டர் , பள்ளி தளாளர் ஜாக்சன் அருள், கருங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பள்ளித் தலைமை ஆசிரியை ஜெபமாலை மேரி வரவேற்றார். விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊர்த் தலைவர் கனகராஜ் பூபாலராயர், விவசாயிகள் சங்கத் தலைவர் குமார், அப்துல் காதர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தளாளர் ஜாக்சன்அருள்,தலைமை ஆசிரியை ஜெபமாலை மேரி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.













