தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி 49-வது பட்டமளிப்பு விழா:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.சந்திரசேகர் 608 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி,2022–2025 கல்வியாண்டு மாணவிகளுக்கான 49-வது பட்டமளிப்பு விழா 21.02.2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.சந்திரசேகர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு தின உரையை நிகழ்த்தினார்.
முன்னதாக வ.உ.சி.கல்விக்குழுமச் செயலாளர் இ.பி.சி.வீ.சொக்கலிங்கம் அவர்கள் துணைவேந்தரை வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர்.சுப்புலட்சுமி மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் கல்வி உடையணிந்து மேடையில் இடம்பெற்றனர். 
மாணவிகளை வாழ்த்திய முதன்மை விருந்தினர், பட்டம் பெறுதல் என்பது கல்வி வாழ்க்கையில் ஒரு முக்கியமான சாதனை என்றும், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தொழில் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து துறைத்தலைவர்கள் தங்களது துறைகளைச் சேர்ந்த மாணவிகளின் பெயர்களை அறிவித்து பட்டங்களை வழங்கினர். இதில் 515 இளநிலை (UG) மற்றும் 93 முதுநிலை (PG) மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.
கல்வியில் சிறந்து விளங்கிய தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகள் செல்வி.கார்த்திகா (BA தமிழ்), செல்வி.மொஹிதீன் ஜாஸ்மின் (BA ஆங்கிலம்) மற்றும் செல்வி.பொன் இசக்கி அர்ச்சனா (பி.காம்.) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
முதன்மை விருந்தினர் தலைமையில் பட்டதாரிகள் அனைவரும் தங்களது பட்டங்களையும் அறிவையும் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
விழாவின் ஏற்பாடுகளை வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.சண்முகப் பிரியா மற்றும் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். அனுஷ்யா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.












