தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி : தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவி முதலிடம்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி :
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவி முதலிடம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை நடத்திய மகாகவி பாரதியார், வ உ சிதம்பரம், கிரா, இளசை மணியன் போன்ற தமிழறிஞர்களின் இலக்கியப்பணி மற்றும் தமிழ் தொண்டினை நினைவு கூறி போற்றும் வகையில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி 06.02.2026 அன்று காமராஜ் கல்லூரியில் நடத்தப்பெற்றது.

அதில் தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி வசந்தகுமாரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

மாணவி வசந்தகுமாரிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரூபாய் 5000 ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

மாணவியை கல்லூரியின் சார்பாக முதல்வர். கனகராஜ் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினார்கள்.