தூத்துக்குடி போல் பேட்டை பொ.தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி போல் பேட்டை பொ.தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி போல் பேட்டை பொ.தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை தாங்கினார். விழாவில் 27 மாணவ – மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

விழாவில் பள்ளிக் கல்விக்குழு உறுப்பினர்கள் சுதன் கீலர், சுதா, டாக்டர். மகிழ் ஜான்,தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் விக்டர் ஞானராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.