தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவியர்கள் கல்வி சுற்றுலாவாக திருநெல்வேலியில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியை பார்வையிட்டனர்.

அறிமுக அரங்கம், சிவகளை, கொற்கை மற்றும் ஆதிச்சநல்லூர் அரங்குகளை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
திரைக்காட்சி மூலம் அதன் சிறப்புகளையும் அறிந்து கொண்டனர்.

நிலத்தில் தோண்டி கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள் மற்றும் இரும்பு பொருட்கள் அனைத்தும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு அரங்கமும் மிகுந்த நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் திருநெல்வேலி அறிவியல் மையத்தையும் பார்வையிட்டனர். அங்குள்ள 3d காட்சியையும் கண்டு களித்தனர். அறிவியல் பூர்வமான அனைத்து விளையாட்டுகளையும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். எவ்வாறு விண்வெளி தளத்தில் ராக்கெட் ஏவப்படுகிறது என்பதை ஒரு சோதனை மூலம் மிக அருமையாக செய்து காட்டினார்கள்.

மாணவ – மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதனை கண்டு களித்தனர். நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, முதுகலை ஆசிரியர் ஐசையா, பட்டதாரி ஆசிரியை ரமா, அந்தோணி ஆஸ்மின், சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.