தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் JCI பெர்ல் சிட்டி க்வீன்பீஸ் இணைந்து நடத்திய மேகா கடற்கரை தூய்மைப் பணி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் JCI பெர்ல் சிட்டி க்வீன்பீஸ் இணைந்து நடத்திய மேகா கடற்கரை தூய்மைப் பணி

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் 70 மற்றும் 69, JCI பெர்ல் சிட்டி க்வீன்பீஸ் இணைந்து நடத்திய மேகா கடற்கரை தூய்மைப் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம் சுற்றுச்சூழல் தூய்மையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பாதுகாக்க, பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதாகும். சுவச்சத்தா ஹி சேவா திட்டத்தின் ஒரு பகுதியாக, இது பொறுப்பான கழிவுநீக்கத்தையும், சமூக ஒத்துழைப்பையும் ஊக்குவிக்க ஒரு முன்னோடிப் படியாக இருந்தது.

இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக ஜெ.எஃப்.எம். கிரண் பான்டு,
தேசிய இயக்குநர் – JCI இந்தியா (பிஆர் & மார்க்கெட்டிங்),
கௌரவ அழைப்பாளராக வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர், டாக்டர் வீரபாகு மற்றும்
நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள்
முனைவர் செல்வம் (அலகு 70), வ.உ.சிதம்பரம் கல்லூரி,
முனைவர் கிருஷ்ணன் (அலகு 69) வ.உ.சிதம்பரம் கல்லூரி,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்டாக்டர். வேலியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

காலை 6:30 மணிக்கு முத்துநகர் கடற்கரையில்
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கடற்கரை தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.

சேகரிக்கப்பட்ட கழிவுகளை முறையான மறுசுழற்சி மற்றும் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை அகற்றுதல்.

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவையாகும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்னிறுத்தும் நிகழ்வாகவும் இருந்தது.