தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் படித்த 124 மாணவர்களுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் படித்த 124 மாணவர்களுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் டிகிரி முடித்த 45 மாணவர்கள் (Phase – I) TATA Electronics நிறுவனத்தில் 02.06.2025 அன்று வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர்கள் அளித்த உற்சாகமும், அவர்கள் காட்டிய அதிக ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, இணைப்புக் கட்டம்-II (Phase-II) க்கு 79 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் மற்றும் அவர்கள் 30.06.2025 (திங்கட்கிழமை) அன்று வேலையில் சேர உள்ளனர். அவர்கள் அதற்கான வேலைவாய்ப்பு கடிதங்களை (Offer Letters) மின்னஞ்சல் மூலம் பெற்றுள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் வேலைவாய்ப்புக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும், தேர்வான அனைத்து மாணவர்களும் தங்கள் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தெரிவித்தார்.