தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் நாளை ஜனவரி -13 பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
75 வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியில் நாளை ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது.
பொங்கல் திருவிழாவானது நாளை காலை 9. 00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் சிறப்பாக கொண்டாட இருக்கின்றனர்.
விழாவிற்கு கல்லூரி செயலாளர் திரு. ஏ.பி.சி. வீ.சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தலைமை தாங்குகிறார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு உறியடி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல்,மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல், எலுமிச்சை மற்றும் கரண்டிப் போட்டி,இசை நாற்காலி போட்டி, புதையல் வேட்டை, பலூன் உடைத்தல் அல்லது ஊதுதல்,தட்டாங்கல், பரமபதம், வடை அல்லது முறுக்கு கடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வ. உ. சிதம்பரம் கல்லூரி சார்பாக அழைக்கப்படுகிறார்கள்.












