உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது :

உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது :

உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு விழிப்புணர்வும் அதைச் சார்ந்த பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார். ஹெபடைட்டிஸ் (கல்லீரல் அழற்சி) வகைகள், நோய்த்தொற்று மற்றும் பரவும் முறைகள் சார்ந்த விழிப்புணர்வு, தடுப்பூசி, சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரம்பகால சிகிச்சை முறைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கல்லூரி முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முதல்வர் வழிகாட்டுதல்படி, நுண்ணுயிரியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.