தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் கலைத் திறன் வெளிப்படுத்தும் நிகழ்வு :
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், மாணவியரின் வளர்ச்சிக்கென அனைத்து துறைப் பேராசிரியர்களையும் உள்ளடக்கிய “மாணவிகள் நலக்குழு” (YOUTH WELFARE) சீரும் சிறப்புமாகச் செயல்படுகிறது.

இக்குழுவானது ஆண்டுத்தோறும் முதலாமாண்டுப் பயிலும் மாணவிகளுக்கெனக் கலைத்திறன் வெளிப்படுத்தும் நிகழ்வினை நடத்தி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும், கலைத் திறன் வெளிப்படுத்தும் நிகழ்வினை 10.07.2026 அன்று, காலை 9.30 மணி அளவில் கல்லூரிக் கலையரங்கத்தில் இறைவாழ்த்தோடும், தமிழ்த்தாய் வாழ்த்தோடும் அரங்கேற்றியது.

இந்நிகழ்வின் தொடக்கமாக, வரவேற்புரையை முனைவர்.யோகஸ்வரி நித்யா வேதியியல் உதவிப்பேராசிரியர் ஆற்றினார். கல்லூரி முதல்வர்.முனைவர்.பழனி நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, மாணவிகளின் கலைத்திறன் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இதில் 11 துறைச் சார்ந்த மாணவிகள் கலந்துக் கொண்டு ஆடல், பாடல், நடிப்பு, சிலம்பம் சுற்றுதல் முதலிய திறனை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வானது, மாணவிகளுக்குக் கலைத்திறனை வெளிப்படுத்தவும், கலைத் திறனை வளர்க்கும் வாய்ப்பாகவும் அமைந்தது. இந்நிகழ்வினை “மாணவிகள் நலக்குழு” பேராசிரியர்கள் நடத்தினர். தேசிய கீதத்தோடு இவ்விழா நிறைவுப் பெற்றது.












