தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி TDTA நடுநிலைப் பள்ளியில் எழுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி TDTA நடுநிலைப் பள்ளியில் எழுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி
TDTA நடுநிலைப்பள்ளியில் 03 – 09 – 2026 வியாழக்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின் பெயரிலும், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆலோசனை பேரிலும், மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கநிலை தூத்துக்குடி முருகேசன் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் எழுத்தறிவு தின விழிப்புணர்வு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இதில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் 20 பேர், ஆசிரியர்கள் கிராமப்புற மக்கள் என 90க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் புதிய பாரத எழுத்தறிவு இயக்க உறுதி மொழியை எடுத்தனர்.

இரண்டாம் நிகழ்வாக ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்று இக்காலகட்டத்தில் எழுத்தறிவு
எண்ணறிவு அனைவருக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்கள். பின்பு முகபாவனை நடிப்பிலும் கற்றலின் இனிமையையும் கையெழுத்து போடத் தெரியாத மக்களின் தடுமாற்ற நிலையையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை சிறப்பாக எழுத்தறிவின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். பின்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலைமுத்து பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், கிராமப்புற மக்கள், கல்வித் துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்ட பேரணியை நடத்தினார்கள்.

இப்பேரணியில் எழுத்தறிவின் முக்கியத்துவம் தாங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும், எழுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றிய வாசகங்களை சொல்லிக் கொண்டும் அந்த கிராமம் முழுவதும் பேரணி வந்தார்கள். இதில் தூத்துக்குடி ஊரக ஆசிரிய பயிற்றுனர் ராமநாதனும் கலந்து கொண்டார். இந்நிகழ்வு சரியாக 12.30 மணி அளவில் முடிவு பெற்றது.