கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவியருக்கு ரொக்கப்பரிசு

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவியருக்கு ரொக்கப்பரிசு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

இந்த பட்டமளிப்பு விழா நிறைவு பெற்றதும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிகவியல் நிறுவன செயலரியல் துறையின் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடம் பிடித்த மாணவி நர்மதா மேலும் 6- வது இடம் பிடித்த மாணவி சண்முகப்ரியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000-த்தை கல்லூரி தாளாளர் விஜயன் வழங்கி வாழ்த்து கூறினார்.

கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டிப் பேசினர்.

ரொக்கப்பரிசு பெற்ற இரு மாணவியரும் தாங்கள் இக் கல்லூரியில் பயின்றதை நினைவு கூர்ந்து தங்களின் உள்ளார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பெற்றோர்கள் இந்நிகழ்வை கண்டு மனம் நெகிழ்ச்சியடைந்தனர்.