தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் 70 வது கல்லூரி விழா :

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் 70 வது கல்லூரி விழா :

வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் 70வது கல்லூரி விழா வ.உ.சிதம்பரம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பேராசிரியர் முனைவர். தவசுபா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஐ கல்லூரி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

கல்லூரியின் தலைவர் உயர்திரு ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை வகித்தார். அவர் கல்லூரி தோன்றிய வரலாற்றையும், வருங்கால ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் எடுத்துரைத்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி பங்கேற்று மாணவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், நல்ல ஆசிரியர்களின் பண்புகள் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவில், கடந்த ஆண்டு பல்கலைக்கழகத் தேர்வில் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தற்பொழுது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் துறைவாரியாக சிறந்த சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கும் வ.உ.சி கல்விக் கழக உறுப்பினர் காந்தி சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியாக மாணவர் பேரவைத் தலைவர் பெனிட்டா பூர்ண பிரசன்னா நன்றி கூறினார்.