தூத்துக்குடி பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி பெரியசாமி அறக்கட்டளை சார்பில் 10 ம்வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 49 மாணவ – மாணவியருக்கும், பன்னிரண்டாம் வகுப்பில் 590 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 6 மாணவ – மாணவியருக்கும், பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் சால்வை அணிவித்து,ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.













