தூத்துக்குடி K.S. மாரியப்பன் மெமோரியல் செவன்த் டே அட்வென்டிஸ்ட் ( SDA) மெட்ரிக் பள்ளியில் பொன்விழா வளைவு ( Arch) திறப்புவிழா இன்று நடைபெறுகிறது

தூத்துக்குடி K.S.மாரியப்பன் மெமோரியல் செவன்த் டே அட்வென்டிஸ்ட் ( SDA) மெட்ரிக் பள்ளியில் பொன்விழா வளைவு ( Arch) திறப்புவிழா இன்று நடைபெறுகிறது

தூத்துக்குடியில் இன்று K.S.மாரியப்பன் மெமோரியல் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் பொன் விழா ஆண்டினை முன்னிட்டு பள்ளியின் முகப்பு ( ஆர்ச்)திறப்பு விழா நடைபெறுகிறது.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி பிரதான சாலையில் அமைந்துள்ளது K.S.மாரியப்பன் மெமோரியல் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி.

கடந்த 1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிக்கு கே எஸ் பி எஸ்( KSPS ) குரூப் ஆப் கம்பெனி கல்விக்காக 2.39 ஏக்கர் அளவுள்ள இடங்களை பள்ளிக்கு வழங்கி உள்ளது.

இப்பள்ளியில் எல்கேஜி முதல் 5 வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

பள்ளி 50 ஆண்டுகளை கடந்து தற்போது ( 55 ஆண்டுகள் ) பொன் விழாவை கொண்டாடுகிறது.

அதனை முன்னிட்டு பள்ளியின் முகப்பு வளைவு ( Arch ) மற்றும் பள்ளியின் சுற்று சுவற்றினை புதியதாக மெருகுடன் கட்டி முடிக்க்கப்பட்டுள்ளது.

அதனை இன்று ( 13 – 02 – 2026 ) சென்னை செவன்த் டே அட்வென்டிஸ்ட் – ன் தென் கிழக்கு இந்திய ஓன்றியத் ( SEIU – South East India union of Seventh Day Adventist )
தலைவர், பாஸ்டர். அம்ப்ரோஸ் காலை 10.00 மணிக்கு திறந்து வைத்து பள்ளிக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.

நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக KSPS நடராஜன் கம்பெனியின் இயக்குனர் மற்றும் பங்குதாரர்கள் ரத்தினவேல், நடராஜ சுப்பிரமணியன் மற்றும் வைரவேல் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கு சென்னை செவன்த் டே அட்வென்டிஸ்ட் -ன்:தென் கிழக்கு இந்திய ஒன்றிய செயலாளர் பாஸ்டர். ஜெபசீலன், பொருளாளர் மூத்தவர்.செல்வம் மற்றும் மண்டல கல்வி அலுவலர் ( Zone lll, SEIU ) தங்கராஜ் முன்னிலை வகிக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆலய ( SDA Church பாஸ்டர், உறுப்பினர்கள், பள்ளி முதல்வர், பொருளாளர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் சந்தோஷ் ராஜ் செய்துள்ளார்.

குறிப்பு:

இப் பள்ளியில் தற்போது எல்கேஜி ( LKG) முதல் 5 ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இப் பள்ளியில் வரும் 2026 – 2027 ம் கல்வியாண்டில் 6 மற்றும் 7 ம் வகுப்பு வரை செயல்பட இருக்கிறது.அதற்கான அட்மிஷன் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் வருங்காலங்களில் பள்ளியில் புதிதாக வகுப்பு கட்டிடங்கள் கட்டி பிரமாண்டமாக செயல்பட இருக்கிறது.