தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர். செல்வம் தொடர்ந்து 5 – வது முறை உலகின் முன்னனி 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்று சாதனை
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் செல்வம், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்ஸ்விர் பிவி (Elsevier BV) இணைந்து வெளியிட்டுள்ள உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகள் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இது தொடர்ந்து ஐந்தாவது முறை (2021, 2022, 2023, 2024, மற்றும் 2025) அவருக்கு கிடைத்த பெருமை ஆகும்.
ஸ்டான்போர்ட்–எல்ஸ்விர் பட்டியல் உலகளவில் சுமார் 1,00,000 விஞ்ஞானிகளை கொண்டுள்ளது. இது 22 பரந்த அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத் துறைகளை உள்ளடக்கியதாகும். (h-index) ஆராய்ச்சி தரம், மேற்கோள்களின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவர அடிப்படையிலான அளவுகோல்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.
டாக்டர் செல்வம், புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் 1,30,223 விஞ்ஞானிகளில் 1261-ஆவது இடத்தை (0.01%) பெற்றுள்ளார். மொத்தத்தில் உலகளவில் 2,36,313 விஞ்ஞானிகளில் 57,017-ஆவது இடம் (0.50%) வகிப்பதோடு, இந்திய அளவில் 6,239 விஞ்ஞானிகளில் 965-ஆவது இடம் (0.35%) பெற்றுள்ளார்.
5,000-க்கும் மேற்பட்ட மேற்கோள்கள் பெற்றுள்ள டாக்டர் செல்வத்தின் இந்தச் சாதனை, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெறும் உயர்தரமான ஆராய்ச்சிக்கும், அவர் காட்டும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாகும்.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு, டாக்டர் செல்வத்திற்கு இதயம் கனிந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த சிறப்பான அங்கீகாரம், அவரது அறிவை மேம்படுத்தும் அர்ப்பணிப்பையும், புவியியல் துறையில் அவர் செய்த சிறப்பான பங்களிப்புகளையும் வெளிப்படுத்துகிறது.












