சீனா பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச மாநாட்டில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி பேராசிரியர் பங்கேற்பு

சீனா பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச மாநாட்டில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி பேராசிரியர் பங்கேற்பு

சீனாவின் சியான் நகரில் அமைந்துள்ள Chang’an பல்கலைக்கழகம் நடத்திய நீர் பாதுகாப்பும், நிலைத்த மேம்பாட்டும் (ICWSSD-2025) என்ற சர்வதேச மாநாட்டில், மே 21 முதல் 31 தேதி வரை சிறப்புப் பேச்சாளராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் புவியியல் துறை பேராசிரியர் டாக்டர். திருமுருகன் அழைக்கப்பட்டு கலந்து கொண்டார்.

இந்த மாநாடு Chang’an பல்கலைக்கழகம், சீனா மற்றும் University of Zululand, தென் ஆப்ரிக்கா ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்றது. டாக்டர் திருமுருகன், நிலத்தடி நீர் மாதிரிப்பாகம் வழியாக நிலத்தடி நீரின் நிலைத்த நிர்வாகம் பற்றிய தனது ஆராய்ச்சிப் படைப்பை வழங்கினார். இதற்காக அவருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

அவரது பயணத்தின் போது, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, எகிப்து, காணா, இந்தியா, குவைத், மலேசியா, நேபாளம், சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

வாழ்த்துக்கள்:

வ. உ. சிதம்பரம் கல்லூரியின் செயலர் ஏ. பி. சி. வீ. சொக்கலிங்கம், முதல்வர் டாக்டர். வீரபாகு மற்றும் அனைத்து பேராசிரியர்களும் டாக்டர் திருமுருகனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.