தூத்துக்குடி மாவட்டம் அனவரதநல்லூர் கிராமத்தில் 18.77 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் மற்றும் பொதுநூலக கட்டிடம் :
சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்புரம் ஊராட்சி அனவரதநல்லூர் கிராமத்தில்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் 2.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது நூலக கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டாச்சியர் தாஹிர் அஹமத்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
ஜான்சிராணி,ஆறுமுகராஜா நயினார்,
உதவிப் பொறியாளர்கள் தளவாய்,
மாரியப்பன் ,வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முக பிரியா,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷா, பணி மேற்ப்பார்வையாளர் திரு.சீனிவாசன்
வருவாய் ஆய்வாளர் மாதவன்
மற்றும் கழக நிர்வாகிகள், குழந்தைகள்
மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.














