“ஞாபகம் வருதே”ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

“ஞாபகம் வருதே”ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

நியாபகம் வருதே! 25-வருடங்களுக்கு பின் பள்ளி மாணவ – மாணவிகள் சந்திப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிராமத்தில் டி.எம்.பி மெக்காய் கிராமிய மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் 1996-2003 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த முன்னாள் மாணவ -மாணவிகளை பள்ளித் தாளாளர் ஜேம்ஸ்பாஸ்கர் , பள்ளித் தலைமை ஆசிரியை வனஜா மங்கள செல்வி மற்றும் ஆசிரியப் பெருமக்கள் வரவேற்று சிறப்பு செய்தனர்.

முன்னாள் மாணவ – மாணவியர்கள் அன்று தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர், மேலும் முன்னாள் மாணவ – மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்த பள்ளிப் பருவ நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் நடனம் ஆடியும்,பாடியும் சிறப்பித்தனர்.

இச் சந்திப்பில் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.