நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி முதலிடம் !
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி முதலிடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தொடர்ந்து எட்டாவது ஆண்டாக வென்று சாதனை படைத்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர்களுக்கான வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும்
2025 2026ம் ஆண்டிற்க்கான பல்கலைகழக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா 3.7.2026 அன்று திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வைத்து நடைபெற்றது.

பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர். சந்திரசேகர் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியதோடு கடந்த ஆண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
ஆண்களுக்கான போட்டிகளில் தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரி 37 புள்ளிகளுடன் முதலிடமும், நாகர்கோவில் ஸ்கார்ட் கிறித்தவ கல்லூரி 34 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும்,பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மற்றும் நாகர்கோவில் தூய ஜெரோம்ஸ் கல்லூரி 28 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பெற்றது.
பெண்கள் பிரிவில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி 52 புள்ளிகளுடன் முதலிடமும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி 26 புள்ளிகளுடன் இரண்டாமிடமும்,தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சமி கல்லூரி 25 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பெற்று வெற்றி பெற்றது.
பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குநர் ஆறுமுகம் கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.












