தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்
சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்புக் குழுக்கள் (அணி எண்கள் 47 & 57) மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பாக “சைபர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கு இனணயப் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த விழிப்புணர்வை மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் ராஜலட்சுமி (முன்னாள் மாணவி ) சட்டத்துறை, ஸ்பார்க் நிறுவனத்தில் உறுப்பினர், ராஜமகிழ்ந்தா சட்டத்துறை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், கலந்து கொண்டனர். முனைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி, வேதியியல் துறைத்தலைவர் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார்.

தகவல் தொடர்பு சாதனங்களைக் கையாளும் முறைகள் குறித்தும் இனணயக் குற்றங்களைக் களைந்து பாதுகாப்பான பயன்பாட்டு பழக்கங்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

இந்நிகழ்வில் சைபர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்தும் மாணவிகள் தெரிந்து கொண்டனர். முனைவர் புஷ்பகவல்லி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் (அணி எண் 57) நன்றியுரை கூறினார்.

கருத்தரங்கில் 183 நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கை வேதியியல் துறைத்தலைவர் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் ஒருங்கிணைப்பாளர், வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் (அணி எண் 47) முனைவர். ஸ்டெல்லா பாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் (அணி எண் 57) முனைவர். புஷ்பகவல்லி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.