- தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் “உலகம் உங்கள் கையில்” திட்டம் மூலம் 793 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினார் கனிமொழி எம்பி

தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரியில், தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. 793 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர், இளம்பகவத் இ.ஆ.ப., தலைமையில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.
மூன்றாம் ஆண்டு பயிலும் 793 மாணவர்களுக்கு இலவசம் மடிக்கணினி வழங்கப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், தூத்துக்குடி துணை மேயர் ஜெனிடா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வ. உ. சிதம்பரம் கல்லூரி கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஜாக்சன் நன்றியுரை வழங்கினார்.












