நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பால் பேட்மிண்டன் போட்டி :
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரிக்கு 4 – வது இடம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பால் பேட்மிண்டன் பெண்களுக்கான போட்டியில் வ. உ. சிதம்பரம் கல்லூரி, பால் பேட்மிட்டன் பெண்கள் அணி நான்காம் இடம் பெற்றுள்ளது.
ஜனவரி 06 மற்றும் 07 அன்று தூத்துக்குடி, ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான பால் பேட்மிண்டன் பெண்களுக்கான போட்டியில் வ. உ. சி கல்லூரி அணி நான்காம் இடம் பெற்றுள்ளது.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வெற்றி பெற்ற வீராங்கனைகளை பாராட்டினார்.












