தூத்துக்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது

தூத்துக்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் (Directorate of Non-formal and Adult Education) நடத்தும்
அடிப்படை எழுத்தறிவு இல்லாத 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் நகர்ப்புறம் சார்பாக இன்று தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி சாமுவேல் புரம் மற்றும் தஸ் நேவிஸ் மாதா தொடக்கப்பள்ளியிலும் அடிப்படை எழுத்தறிவு தேர்வை 42 பேர் எழுதினார்கள்.

தேர்வு மையத்தை பள்ளித் துணை ஆய்வாளர் அப்துல் காதர் நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் மற்றும் மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) பார்வதி ஆசிரியர் பயிற்றுநர்கள் இராஜேஸ்வரி, கணபதி,பால்சாமி ஆகியோர் பார்வையிட்டனர்.