தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் இன்று பீட்ஸ் 75 இசை நிகழ்ச்சி
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி தனது 75 வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது.
பவள விழாவின் ஒரு பகுதியாக இன்று ( 10 – 05 – 2025 )சனிக்கிழமை மாலை 6. 00 மணிக்கு பீட்ஸ் 75 என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது.
அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறார் வ. உ. சிதம்பரம் கல்லூரி சார்பாக முதல்வர் முனைவர். வீரபாகு.












