தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மூன்று அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மூன்று அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, டிசம்பர் 11 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுதல் மற்றும் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் ஜான் டால்டன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். முதல்வர் அருட்சகோதரி முனைவர். ஜெஸி பெர்னாண்டோ தலைமை உரையாற்றி போட்டித் தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கின்ஸ் அகாடமியின் நிறுவனர் பேச்சிமுத்துவின் அயராத சேவையை அங்கீகரிக்கும் வகையில் கல்லூரி சார்பில் கல்வி சேவகர் விருது வழங்கப்பட்டது.

வர்சவ் அகாடமி, கின்ஸ் அகாடமி மற்றும் கணேஷ் ஐஏஎஸ் அகாடமியுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

போட்டித் தேர்வுகளுக்கான நேர மேலாண்மை திறன்கள் குறித்த தனது கருத்துக்களை தலைமை விருந்தினர் பகிர்ந்து கொண்டார். மேலும், போட்டி தேர்வர்கள், வெற்றிக்காக தங்களைத் தாங்களே ஊக்குவிக்க வேண்டும் என்றும், போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு இணையத்தை நன்முறையில் பயன்படுத்துமாறும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மூன்று அகாடமிகளின் நிறுவனர்கள் தங்கள் அகாடமிகளில் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிப் பேசிய பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.

தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர். சோனல் மற்றும் குழு உறுப்பினர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.