தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் சர்வ சமய பிராத்தனை
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செங்சுருள் சங்கம் இணைந்து 30.01.2026 வெள்ளியன்று, சர்வ சமய கூட்டுப் பிராத்தனை நடத்தியது.
தேசத் தந்தை காந்தியடிகளின் ஆளுயர படத்திற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் கனகராஜ் தங்கவேல் மலர்மாலை அணிவித்து தியாகிகள் தின அனுசரிப்பை விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்றப்பட்டது. மாணவ ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடகர்கள் குழு சர்வ சமய பாடல்களை பாடினர். ரகுபதி ராகவ் ராஜாராம் பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியைடுத்து பேராசிரியர்கள் உள்பட முதலாமாண்டு மாணவ ஆசிரியர்கள் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றும் நல்லுயிர் நீத்த தியாகிகளைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி மிகவும் அமைதியான சூழ்நிலையில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
மாணவ – ஆசிரியர்கள் அதிஷ்டமரியாள், தங்க பவிதா, ரெக்ஸி மற்றும் சண்முக கணேசன் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முனைவர்.பிரேம லதா, கல்வியியல் துறை இணைப்பேராசிரியர், முனைவர்.சசிகலா, கல்வியியல் துறை உதவி பேராசிரியர், பிரியா, ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் மற்றும் ரூபினா தன சுதா, உயிரறிவியல் துறை உதவி பேராசிரியர் கல்லூரி முதல்வரின் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.












