தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிலம்பம் மற்றும் கராத்தேயில் தேசிய அளவில் சாதனை
தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள்தூத்துக்குடி தூயமரியன்னை பள்ளியிலும், கராத்தே போட்டிகள் பண்டாரவிளை கனி மகாலிலும் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
ஜூனியர் சிலம்பப் போட்டியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கராத்தே போட்டிகளில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று நைனார் நாகேஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.
கலைத்திருவிழாவில் ஓவியம் வரைதல் போட்டியில் கோகுல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் மற்றும் ஆசிரியர்கள் ரத்னா, பவானி பத்மா, ஜான்சி ரெஜி, ஜான்சி ராணி உஷா ராணி, ஜாய்ஸ் உமா , செல்லப்பெருமாள் பாராட்டினார்கள்.












