கனமழை எதிரொலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு ஒத்தி வைப்பு
தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் நாளை (24.11.2025) திங்கள்கிழமை நடைபெற இருந்த 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ( செமஸ்டர் தேர்வு ) ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு பல்கலைக்கழக தேர்வுத்துறை தேர்வாணையர் அறிவித்துள்ளார்.












