கல்வியை சுவாசிக்கும் கல்வித் தந்தைக்கு சதாபிஷேக விழா
கல்வியை தனது உயிர் மூச்சாக சுவாசிக்கும் கல்வித் தந்தை தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் வ. உ. சிதம்பரம் கல்லூரியின் செயலாளர் கல்வித் தந்தை ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் மற்றும் சுப்புலட்சுமி தம்பதியரின் சதாபிஷேக திருவிழா கடந்த 10 ம் தேதி தூத்துக்குடி சோனா மஹாலில் நடைபெற்றது.
விழாவில் ஏ. பி. சி.வீ சண்முகம், எ.பி. சி.வீ. கணேஷ் வ. உ. சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் சொ. வீரபாகு மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

சதாபிஷேகம் கண்ட தம்பதியரை முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
எளியவர்களும் எளிதாக கல்வி கற்க குலபதி ஏ.பி.சி.வீரபாகுவால் நிறுவப்பட்டது தூத்துக்குடி வ உ சிதம்பரம் கல்லூரி ஆகும்.
கப்பலோட்டிய தமிழர்,செக்கிழுத்த செம்மல் ஐயா வ. உ.சிதம்பரனார் பெயரை தாங்கி வரும் இக்கல்லூரியில் நாம் நுழையும் பொழுதே நமக்கு கோவிலுக்குள் செல்லும் எண்ணம் தோன்றுகிறது.

கல்லூரியை நிறுவிய ஐயா குலபதி ஏ.பி.சி. வீரபாகு அவர்கள் வருமானத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியை ஐயா கல்வித்தந்தை ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் அவர்கள் வழிநடத்தி வருகிறார்கள்.
கல்வித்தந்தை ஏ.பி.சி. வீ.சொக்கலிங்கம் அவர்கள் கல்லூரியை கண்ணும் கருத்துமாக கவனித்து வரும் சூழலில் உள்ளூரில் இருக்கும் நாளில் எல்லாம் தினமும் கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரியை சுற்றி வந்து கல்லூரியின் சுவாசக்காற்றை சுவாசித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கல்வியை தனது சுவாசம் என்ற எண்ணத்தில் செயல்படும் அவர்கள் தனது மூச்சுக் காற்றை பெரும்பாலும் கல்லூரியில் இருந்தே பெறுகிறார்கள்.அவர்கள் இந்நாளில் சதா பிஷேகம் விழாவினை காண்பதனை கல்வியாளர்கள் அனைவரும் பெருமையாக கருதுகிறார்கள்
ஐயா கல்வித் தந்தை ஏபிசி சொக்கலிங்கம் அவர்கள் பல்லாண்டு காலம் நலமாக வாழ்ந்து தனது திருமண நூறாவது ஆண்டு விழாவான கனகாபிக்ஷேகத்தை கண்டு நீடூழி வாழ வேண்டும் என்று கல்விக் கடவுள் சரஸ்வதி தேவியை வேண்டுவதே கல்வியாளர்களின் வேண்டுதலாக உள்ளது.













