கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம்
கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேர்தல் கல்விக்குழு மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண் 132 இணைந்து கல்லூரி வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் 23.01.2026 அன்று நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்சிவகுமார் நீதித்துறை நீதிமன்றங்கள் கோவில்பட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் கடமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறினார். வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு கடைபிடிக்கப்பட்டது.
கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழிகாட்டுதலின்படி இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தேர்தல் கல்விக்குழு அலுவலர்கள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் இனணந்து ஏற்பாடு செய்திருந்தனர்.












