கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மழலையர்
பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலைகளுக்கான பட்டமளிப்பு விழா 28/3/2026 சனிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ரமேஷ் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உபதலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்கம் செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், உறுப்பினர் ராஜேந்திரபிரசாத், அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம், பொருளாளர் பாஸ்கரன் உறுப்பினர்கள் செந்தில்குமார்,பொன்ராமலிங்கம் மற்றும் ICM பள்ளி பொருளாளர் ராஜா அமரேந்திரன், நாடார் நடுநிலைப் பள்ளி உறுப்பினர்கள் வெங்கடேஷ், வைத்திலிங்கம், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி உறுப்பினர் அருண் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளிக்குழந்தைகள் நிரல்யா, யாகேஷ், பிரகதீஸ்வரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். பள்ளி முதல்வர் பிரபு ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல அரசு மருத்துவர் தேவசேனா கலந்து கொண்டு சுகாதாரம், குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், கல்வி முன்னேற்றம் மற்றும் குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு போன்ற பல்வேறு முக்கிய குறிப்புகளை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

பின்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 58 க்கும் மேற்பட்ட மழலையர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பட்டங்களையும் வழங்கினர். இதுபோல் கல்வியிலும், பல்வேறு திறன் சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற
மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் சங்க பெரியோர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. யுகேஜி ஆசிரியர்கள் ஐஸ்வர்யம், அன்னலட்சுமி உட்பட இருபால் ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

மாணவிகள் ஷாக்க்ஷி, கார்த்திகா லட்சுமி ஆகியோர் நன்றி கூறினர்.