தென்காசியில் இந்திய ஹாக்கி நூற்றாண்டு விழா போட்டி:விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மற்றும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

தென்காசியில் இந்திய ஹாக்கி நூற்றாண்டு விழா போட்டி:விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மற்றும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நூற்றாண்டு  விழா கொண்டாட்டம் இந்தியா முழுவதும் ஹாக்கி இந்தியா – மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இதற்கான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டன.

தென்காசி மாவட்டத்தின் ஹாக்கி சங்கமான யூனிட் ஆப் தென்காசி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையுடன் இணைந்து ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் நடத்தப்பட்டன.

போட்டிகளை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அலுவலர் ராஜேஷ் முன்னிலை வகித்தும் வாழ்த்துரை வழங்கியும் சிறப்பு செய்தார். ஹாக்கி யூனிட் ஆப் தென்காசி செயலாளர் முனைவர் பால் மகேஷ் விளையாட்டு வீரர்களையும், பயிற்றுநர்களையும், சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஆடவர் அணியில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், ஹாக்கி ஸ்டார் அகாடமி ஏ மற்றும் பி அணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

மகளிர் பிரிவில்,ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம், சேர்ந்தமரம் புனித ஜோசப் பள்ளி அணி இரண்டாம் இடமும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பி டீம் மூன்றாம் இடமும் பெற்று சிறப்பு செய்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையுடன் இணைந்து ஹாக்கி யூனிட் ஆப் தென்காசி தலைவர் முனைவர்.கல்யாணி சுந்தரம், பொருளாளர் செந்தில்குமார், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.