தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தூத்துக்குடி விமான நிலைய நூலகத்திற்கு புத்தகம் வழங்கியது:
தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, வ.உ.சிதம்பரம் கல்லூரி சார்பில் இந்திய விமான நிலைய ஆணையம், தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள “FLYBRARY” தொடக்கத்திற்காக 40 புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த முயற்சியின் நோக்கம், பயணிகளிடையே வாசிப்பை ஊக்குவிப்பதுடன், அவர்களின் பயண அனுபவத்தை மேலும் சிறப்பாக்குவதாகும்.
இத்தகைய உயர்ந்த நோக்கத்திற்காக
வ.உ.சிதம்பரம் கல்லூரி தனது பங்களிப்பை வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறது என்று கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு கூறினார்.
FLYBRARY -குறிப்பு :
விமான நிலையங்களில் (விமான நிலையங்கள்) பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இலவச நூலகம் (இலவச புத்தக நூலகம்) அல்லது புத்தகப் பரிமாற்றம் ‘Flybrary’ என குறிப்பிடப்பட்டுள்ளது.












