தூத்துக்குடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சாமுவேல்புரம் மாணவர்களுக்கு காமராஜர் விருது :
மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார் !

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று அக்டோபர் – 22 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது . இதில் தூத்துக்குடி சாமுவேல்புரம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2024 – 2025 ம் கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்று கல்வி, விளையாட்டு மற்றும் பிற கலைகளில் சிறந்து விளங்கிய அகிலா பானு ,பில்கேட்ஸ் ஆகிய 2 மாணவர்களுக்கு காமராஜர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூபாய் 20,000 காசோலையை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.

இக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
காமராஜர் விருது பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ருஃபினா ரொட்ரிக்கோ, ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்.













